கந்தர்வகோட்டை, டிச.24: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாரத்தில் உள்ள வெள்ளாளவிடுதி ஊராட்சியில் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் யுவஶ்ரீ ,ஷாலினி, செல்வபிரைஸி, சௌமியா, சோபியா மலர்விழி, பிரியா, ஶ்ரீ வர்தினி, பிரதீபா, சர்மிகா, ஷண்முகப்பிரியா சார்பில் விவசாயிகளுக்கான சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி குறித்த முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டன.
மேலும், விவசாயிகளுக்கு தரமான தென்னை கன்றுகள் வழங்கப்பட்டு, தென்னையின் முக்கிய வகைகள், நடவு முறை, பராமரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் விளைச்சல் அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்கள் விரிவாக விளக்கினர்.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு தீர்வு பெற்றனர். விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
