புதுக்கோட்டையில் சிஐடியூ மறியல்: 412 பேர் கைது

புதுக்கோட்டை, டிச. 24: தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற கோரி புதுக்கோட்டையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 110 பெண்கள் உட்பட 412 பேரை போலீசார் கைது செய்தனர். போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டத்தொகுப்புகளாக மாற்றியதை கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ) சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார்.போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் மாரிக்கண்ணு, துணைத் தலைவர் மணிமாறன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் 110 பெண்கள் உட்பட 412 பேரை போலீசார் கைது செய்தனர். புகையிலை மற்றும் போதை பொருட்களை உட்கொள்வதை தவிர்ப்போம், வளமான தமிழகத்தை உருவாக்குவோம், மது பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும், மது பழக்கம் உடல் உயிர் ஆன்மாவை அழிக்கும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.

 

Related Stories: