போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், 68வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவருக்கான, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் கடற்படையை சேர்ந்த கிரண் அங்குஷ் ஜாதவ், அற்புதமாக செயல்பட்டு 252.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் அர்ஜுன் பாபுடா, 251.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். 50 மீட்டர் ைரபிள் 3 நிலை போட்டியில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், 229.8 புள்ளிகள் மட்டும் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். தவிர, ரயில்வேயை சேர்ந்த ஷாகு துஷார் மனே 4ம் இடமும், ஹிமான்சு 5ம் இடமும் பிடித்தனர்.
தேசிய துப்பாக்கி சுடுதல்: அங்குஷ் ஜாதவுக்கு தங்கப் பதக்கம்
- படப்பிடிப்பு
- அங்குஷ் ஜாதவ்
- போபால்
- 68வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்
- போபால், மத்திய பிரதேசம்
- கிரண் அங்குஷ் ஜாதவ்
- கடற்படை
