ஐஎல் டி20 கிரிக்கெட்: ஷகிப் அபார ஆட்டம்; எம்ஐ எமிரேட்ஸ் வெற்றி

துபாய்: ஐஎல் டி20 போட்டிகள் துபாயில் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் டிசர்ட் வைபர்ஸ் – எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டிசர்ட் வைபர்ஸ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டான் லாரன்ஸ் 34 பந்துகளில் 35 ரன் எடுத்தார். பின்னர், 125 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணி, 17.3 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து, 128 ரன் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2 விக்கெட் மற்றும், ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்து வெற்றிக்கு ஊன்றுகோலாய் இருந்த ஷகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories: