×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.நெல்லை சுத்தமல்லி காவல் நிலையத்தில் 2014ல் ஆய்வாளராக பணியாற்றிய சந்திரசேகர் மீது குற்றம்சாட்டப்பட்டது. துறைரீதியான விசாரணைக்குப்பின் சந்திரசேகருக்கு 2 ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தம் செய்து நெல்லை சரக டிஜிபி உத்தரவிட்டார். அரசு வழக்கறிஞருக்கு அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்காமல் தண்டனை விதித்ததாக சந்திரசேகரன் ஐகோர்ட்டில் மனு அளித்தார். டிஜிபி உத்தரவை ரத்து செய்து, 2016ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் சந்திரசேகரன் பெயரை சேர்க்க ஐகோர்ட் ஆணையிட்டது. உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என சந்திரசேகர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

Tags : High Court ,Tamil Nadu Home ,DGP ,Chennai ,Chandrasekhar ,Nellai Suttamalli police station ,
× RELATED மூணாறில் இரவில் வெப்பநிலை மைனஸ் 1...