ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாள் ஏழைகளின் நலனுக்காக அயராது உழைத்து, பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்

*ஸ்ரீகாளஹஸ்தி முன்னாள் எம்எல்ஏ பேச்சு

ஸ்ரீகாளஹஸ்தி : முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி பிற்ந்த நாள் விழாவில் ஏழைகளின் நலனுக்காக அயராது உழைத்து, பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதாக ஸ்ரீகாளஹஸ்தி முன்னாள் எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி கூறினார்.

திருப்பதி அடுத்த ரேணிகுண்டா அஷய சேத்திரத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாளையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி முன்னாள் எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வைகள், பழங்கள், பன்கள், பிஸ்கட்கள், தட்டுகள் மற்றும் கண்ணாடிகளை வழங்கினார்.

பின்னர், ரேணிகுண்டா ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளை கொண்டாடினார்.

இதைத்தொடர்ந்து ரேணிகுண்டா நகரில் உள்ள ஒய்.எஸ்.ஆர் சந்திப்பில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கொள்கைகளுக்கு ஏற்ப ஏழைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதுதான் நாம் அவருக்கு வழங்கும் உண்மையான பிறந்தநாள் பரிசு.

மேலும், ஏழைகளின் நலனுக்காக அயராது உழைத்து, பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திய முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி, இதுபோன்ற பிறந்தநாள் விழாக்களை இன்னும் பல ஆண்டு கொண்டாட வாழ்த்துகிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, திருமலை ரெட்டி, ரமேஷ், ஆத்தூர் ஹரிபிரசாத் ரெட்டி, தயாகர் ரெட்டி, நகர மன்ற தலைவர் பிரபாகர், சர்பஞ்ச் நாகேஷ், ஸ்ரீகாளஹஸ்தி நகர தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு, கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னா ராயல், சுரேஷ், கங்காதரம், பாஸ்கர், ஹரி நாயுடு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: