×

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டு மக்கள் நோயில்லா வாழ்வைப் பெற வேண்டுமென்றால் நோய்களை நீக்குவதற்கான மருத்துவ வசதிகள் அனைத்துப் பகுதிகளிலும் உருவாக்கப்படுவதோடு, மருத்துவர், செவிலியர், தொழில்நுட்பப் பணியாளர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த புதுப் பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம் என்ற அமைப்பினை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தினார்.

இதன்மூலம் மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டன. மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்கள் தற்போது தங்களை பணி நிரந்தரம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பும், கடமையும் திமுக அரசுக்கு உண்டு. வாக்குறுதியை நிறைவேற்றாமல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது குற்றம் சுமத்துவது கேலிக்கூத்தானது. பிறர் மீது அனாவசியமாக பழிபோடுவதை நிறுத்திக் கொண்டு செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்.

Tags : OPS ,Chennai ,Former ,Chief Minister of ,Tamil Nadu ,O. Pannirselvam ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...