×

திருப்பரங்குன்றத்தில் தொழிலாளியை தாக்கி பாஜவினர் அராஜகம்

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் சார்பாக சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றும் விழா நேற்று நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் சிலர் நேற்று மாலை அகல் விளக்குகளுடன் மலைக்கு செல்ல முயன்றனர். போலீசார் தடுத்ததால் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அப்போது, பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையிலான கட்சியினர், திடீரென அங்கு வந்து கைதானவர்களை சந்திக்க அனுமதி கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் எச்.ராஜா மட்டும் போலீசார் அனுமதியுடன் அவர்களை சந்தித்தார். அவர்களை விடுவிக்க கோரி பாஜ மற்றும் இந்து அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த டிரை சைக்கிள் தொழிலாளியை, பாஜ தொண்டர் ஒருவர் தாக்கினார். அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

Tags : BJP ,Thiruparankundram ,Sandankudu festival ,Sultan Sikandar Badusha Masjid ,Thiruparankundram, Madurai ,Munnani ,
× RELATED ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின்...