×

தட்கல் மின் இணைப்புக்கு கால அவகாசம் வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்க விண்ணப்பிக்க மேலும் கால அவகாசத்தை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு கடந்த 16ம் தேதி தமிழகத்தில் இலவச மின்சாரம் வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகள் தட்கல் திட்டத்தில் இணைப்பு வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என்று காலக்கெடு எதுவும் குறிப்பிடாமல் அறிவித்து இருந்தது. ஆனால் அறிவிப்பு வெளியான 2 தினங்களில் அதாவது 18ம் தேதி மதியம் 2 மணியுடன் இத்திட்டம் நிறைவுப் பெற்றுவிட்டதாக விண்ணப்பம் பெறுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையில் நஷ்டம் ஏற்பட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும். அதோடு குறைந்த பட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது இத்திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வழங்க வேண்டும்.

Tags : G.K. Vasan ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu… ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...