- கோட்சே
- கவர்னர்
- ரவி
- வேல்முருகன்
- சென்னை
- தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி
- ஆர்.என்.ரவி
- வடக்கு மாநில
- மகாத்மா காந்தி
- நேதாஜி சுபாஷ் சந்திரா...
சென்னை: வடமாநில தியாகிகள் குறித்துப் பாடம் எடுக்க வேண்டாம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடமாநிலத் தியாகிகள் என்றால் எங்களுக்கு மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரைத் தெரியும். இவர்களைத் தவிர வேறு யாரை ஆளுநர் குறிப்பிடுகிறார்? காந்தியைக் கொன்ற கோட்சேவின் வாரிசான ஆர்.எஸ்.எஸ். ரவி எங்களுக்குப் பாடம் எடுக்கக் கூடாது’ என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத இயக்கத்தைச் சேர்ந்த ஆளுநருக்கு, தியாகிகள் பற்றிப் பேச எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என்று அவர் சாடியுள்ளார். பதவி காலம் முடிந்தும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆளுநரைத் தமிழக அரசு வெளியேற்ற வேண்டும் என்றும், ஆளுநர் பதவியை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வேல்முருகன் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
