* ரூ.1674 கோடி பாக்சிங் ஜேக்கை வீழ்த்திய ஜோசுவா
மயாமி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், மயாமி நகரில், முன்னாள் ஹெவிவெயிட் உலக குத்துச்சண்டை சாம்பியன் அந்தோணி ஜோசுவா (28), யூடியுபர் மற்றும் குத்துச் சண்டை வீரர் ஜேக் பால் (36) இடையில் குத்துச் சண்டை போட்டி நடந்தது. 8 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஜோசுவா அற்புதமாக குத்துகள் விட்டு, ஜேக் பாலை நிலைகுலையச் செய்து, 6வது சுற்றில் அபார வெற்றி பெற்றார். இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை, ரூ. 1674 கோடி. தோல்வியடைந்த ஜேக் பால், கடந்தாண்டு, பிரபல குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசனுடன் (59) மோதி வெற்றி பெற்றவர்.
* ஐஎல் டி20 போட்டியில் துபாய் கேபிடல்ஸ் வெற்றி
துபாய்: டிபி வேர்ல்ட் சர்வதேச லீக் டி20 (ஐஎல் டி20) சாம்பியன்ஷிப் போட்டியில் துபாய் கேப்பிடல்ஸ் – ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய துபாய் கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் செதிகுல்லா அடலின் (44 பந்து 66 ரன்) அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. பின்னர் ஆடிய ஷார்ஜா வாரியர்ஸ் அணி, 17 ஓவரில் 117 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதனால், ஐஎல் டி20 வரலாற்றில் முதல் முறையாக, 63 ரன் வித்தியாசத்தில் துபாய் கேபிடல்ஸ் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.
* சுவிஸ் வீரர் வாவ்ரிங்கா 2026ல் ஓய்வு பெறுகிறார்
பாரிஸ்: சுவிட்சர்லாந்தை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் வீரர் ஸ்டான் வாவ்ரிங்கா, வரும் 2026ல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர், 3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியவர். தவிர, 2008ல் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது, ரோஜர் பெடரருடன் சேர்ந்து, ஆடவர் இரட்டையர் பிரிவில் வாங்ரிங்கா தங்கம் வென்றார். கடந்த 2014ல், சுவிட்சர்லாந்து அணி, முதல் டேவிஸ் கோப்பை சாம்பியன் பட்டம் பெற, அவரது அசத்தல் ஆட்டம் உதவியது. தற்போது 41 வயதாகும் வாவ்ரிங்கா, கடந்த 2017ம் ஆண்டு வரை, 16 ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
