திருச்சி,டிச.20: திருச்சி சாலை ரோடு பகுதியில் வீட்டினுள் புகுந்து 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனியை சேர்ந்தவர் கற்பகம் (52). சுகாதாரத் துறையில் டேட்டா ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் டிச.9ம் தேதி காலை தனது வீட்டைப் பூட்டி சாவியை மின் பெட்டியில் வைத்து விட்டு வேலைக்குச் சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு திரும்பிய போது, மர்ம நபர்கள் வீட்டை திறந்து பீரோவில் வைத்திருந்த 7 பவன் தங்கச் சங்கிலி, தங்க டாலர் நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து கற்பகம் உறையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
