திருச்சி,டிச.17: நாடாளுமன்றத்தில் கே.என்.அருண் நேரு எம்பி எழுப்பிய வாதங்கள் வருமாறு:
திருச்சி – சென்னை, மதுரை – சென்னை வழித்தடங்களில் சிறிய ரக ATR விமானங்களுக்குப் பதிலாக, @IndiGo6E நிறுவனம் இன்று முதல் (நேற்று) AIRBUS ஜெட் விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நன்றி, இந்த சேவை அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமின்றி, தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும் என விமானப் போக்குவரத்துத் துறையையும், இண்டிகோ நிறுவனத்தையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் UDAN திட்டத்தை, தொலைதூர சிறு நகரங்களை பெருநகரங்களுடன் இணைக்கும் உயரிய நோக்குடன், விமான நிறுவனங்கள் நேர்மையாகவும் முழுமையாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்பதையும் குறிப்பிட்டார்.
