கொள்ளிடம், டிச.20: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக மழை இன்றி இருந்து வரும் நிலையில் மாலை ஆறு மணி முதல் மறுநாள் 9 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது.இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் மூடு பனியின் காரணமாக முகப்பு விளக்கு ஒளியுடன் சென்று வந்தன. மேலும் தொடர் பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில் அதிக குளிர் நடுநடுங்க வைத்ததால் முதியோர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். நேற்று காலை 9 மணி வரை தொடர்ந்து பனிமூட்டம் இருந்து வந்ததுடன் குளிரும் இருந்து வந்தது. நேற்று மூடுபனியுடன் கடுங்குளிரும் இருந்ததால் அனைவரும் அவதி அடைந்தனர்.
