தேவதானப்பட்டி, டிச. 20: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் வசித்து வருபவர் ராஜசேகரன். இவருக்கும், ராமர் கோயில் தெருவில் வசிக்கும் மருதுபாண்டி என்பவருக்கும் இடையே நாய்கள் வளர்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் திடீரென பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து ஒரு தரப்பின் புகார் அடிப்படையில் ராஜசேகரன், காட்டுராணி, தேவயானி, கண்ணன், சக்திபாண்டி ஆகியோர் மீதும், காட்டுராணி அளித்த புகாரின் பேரில் மருதுபாண்டி, அருண்பாண்டி ஆகியோர் மீதும் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
