வள்ளிமலை கோயிலில் விபூதி காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு திரளான பக்தர்கள் தரிசனம் மார்கழி மாத பிறப்பையொட்டி

பொன்னை, டிச. 17: வள்ளிமலையில் மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி வெள்ளி கவச விபூதி காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு மலை மேல் சுப்பிரமணியநாதராகவும் மலையடிவாரத்தில் ஆறுமுகநாதராகவும் வள்ளி தெய்வானை சமேத முருகர் வீற்றிருக்கின்றனர். இங்கு கிருத்திகை, பிரதோஷம் மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வெள்ளிக்கவச சந்தன காப்பு அலங்காரத்திலும், ஆறுமுகநாதர் வெள்ளி கவச விபூதி காப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். மார்கழி மாதம் முதல் தினமான நேற்று காலை முதலே பெண்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் ஆறுமுகநாதரை தரிசனம் செய்தனர்.

Related Stories: