சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். அப்படி வளர்த்தல் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதற்கான தீர்மானம் என்பது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய் இனங்களுக்கு புதிதாக வாங்கி வளர்பவர்களுக்கு ரூ .1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானத்தை சென்னை மாநகராட்சியில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்ல பிராணிகளில் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமை பெற்று இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்ல பிராணி உரிமையாளர்கள் பொறுப் பேற்றவுடன் சிலருக்கு இடையூறு ஏற்படாத வகையில் செல்ல பிராணிகளை வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களும், கடிக்கும் சம்பவங்களும் புகாராக எழுந்து வந்த நிலையில், இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் பிட்புல் மற்றும் ராட்வீலர் என்ற நாய்களின் ஹகோர்சமான குணங்களால் அதிகளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

சம்மந்தப்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஹகோர்சமான தன்மை கொண்ட வளர்ப்பு நாய்கள் இனங்களான பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களுக்கு சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ப்பதற்கு தடை விதித்து இன்று சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளை முதல் பிட்புல், ராட்வீலர் என நாய்களுக்கு செல்ல பிராணிகள் உரிமை பெற விண்ணபிப்பதற்கு தடைவிதிக்கப்படும் என்றும், உரிமைத்தை தடை விதிக்கப்படும் என்று இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே உரிமை பெற்ற பிட்புல், ராட்வீலர் வளர்ப்பு நாய்களை வீட்டிற்கு வெளியே செல்லும் போது அவற்றுக்கு கழுத்துப்பட்டை மற்றும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கவும் அதனை பின் பற்ற விட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: