மாணவர் அமைப்புத் தலைவர் சுட்டுக் கொலை: வங்கதேச தலைநகர் டாக்காவில் வன்முறை

 

டாக்கா: வங்கதேசத்தில் மாணவர் அமைப்புத் தலைவர் ஒஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வன்முறை வெடித்தது. மர்ம நபர்களால் சுடப்பட்ட ஒஸ்மான் ஹாதி சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஹாதியின் மரண செய்தி வெளிவந்ததன் தொடர்ச்சியாக இளைஞர்கள் வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். நேற்று முதல் தலைநகர் டாக்காவில் அரங்கேறிய வன்முறையில் முன்னணி நாளிதழ்களான டெய்லி ஸ்டார், ப்ரோதாம் லோ அலுவலகங்கள் தீ வைத்தனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது சுடப்பட்ட ஹாதி மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.

மர்ம நபர்களால் சுடப்பட்ட ஒஸ்மான் ஹாதி சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த ஒஸ்மான் ஹாதி பிப்வரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் டாக்காவில் போட்டியிட இருந்தார். கடந்த ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் கிளர்ச்சியில் ஒஸ்மான் ஹாதி முன்னணியில் இருந்தவர். ஹாதியை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு 42,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

Related Stories: