ஒன்றிய அரசுக்கு வேல்முருகன் கண்டனம்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள அணுசக்தி திருத்த மசோதாவானது, இந்திய பெருநிலத்தின் பாதுகாப்புக்கும், ஒட்டுமொத்த இறையாண்மைக்கும் விடப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.
ஆபத்தான அணுசக்தி துறையை தனியார் மயமாக்குவது என்பது, நாட்டை பேரழிவிற்குள் தள்ளும் பாசிச பாஜவின் திட்டமிட்ட செயலாகும். நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த துறையை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதன் மூலம், ஒன்றிய அதிகாரத்தில் இருக்கும் பாஜ அரசு தனது கோர முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது.

Related Stories: