×

பீகார் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதின் நபின்

பாட்னா: புதிதாக நியமிக்கப்பட்ட பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின், பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் நிதிஷ் அமைச்சரவையில் சாலை கட்டுமானம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி போன்ற முக்கிய துறைகளை வகித்து வந்தார். இந்நிலையில் டெல்லியில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று அவரது இல்லத்தில் நிதின் நபின் சந்தித்து பேசினார். அப்போது பாஜ தேசிய செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபினுக்கு சி.பி.ராதா கிருஷ்ணன் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

Tags : Nitin Nabin ,Bihar ,Patna ,BJP ,Nitish Kumar ,Nitish ,
× RELATED டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்கை...