பாதாள சாக்கடை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

 

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ்நிலைய பகுதியில் இருந்து கூட்ெஷட் வழியாக ஹில்பங்க், கூடலூர் பகுதிகளுக்கு செல்ல சாலை உள்ளது. இச்சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில் பாதாள சாக்கடை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பழுதடைந்து காணப்பட்ட இச்சாலை, அண்மையில் நெடுஞ்சாலைத்துறையால் தார்கலவை கொண்டு செப்பனிடப்பட்டது.

பாதாள சாக்கடை தொட்டி மூடி திறக்கும் வகையில் அந்த இடங்களில் தார் கலவை போடாமல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடங்கள் மட்டும் பெரிய அளவில் பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனை அறியாமல் வேகமாக வரக்கூடிய வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி தடுமாறுகின்றனர். எனவே பாதாள சாக்கடை தொட்டிக்காக விடப்பட்டுள்ள பள்ளங்களை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: