சென்னை: கலைஞர் பல்கலை. மசோதா, விளையாட்டு பல்கலை. மசோதாவை ஆளுநருக்கு திருப்பி அனுப்ப வேண்டும். 2 மசோதாக்களையும் ஆளுநருக்கு திருப்பி அனுப்பக் கோரி குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம் அளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கினார்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள். தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு சட்டப்படி ஒப்புதல் தர ஆளுநருக்கு ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்
