சென்னை: 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்து “விபி ஜி ராம் ஜி” சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மாநிலங்கள் மீது கடுமையான நிதிச் சுமை ஏற்படும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கிராமப்புற வாழ்வாதார பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 100 நாள் வேலை திட்ட பெயரை மாற்றுவது கிராம சுயராஜ்ஜியம், அதிகாரப்பரவல் பற்றிய பார்வையை சிதைக்கும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் அடிப்படையான தன்மையை மாற்றி, புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது
