×

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் விசாரணையின்போது கடந்த ஜூன் 28ல் உயிரிழந்தார். இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் எஸ்ஐ சிவக்குமார், ஏட்டு இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன்ஜாமீன் கோரி, ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி மதி முன் விசாரணைக்கு வந்தது.

சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் முகைதீன் பாட்சா ஆஜராகி, ‘‘வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி, சிபிஐ தரப்பில் இதனை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags : CBI ,DSP ,Madapuram ,Ajithkumar ,Madurai ,Kaliamman temple ,Thiruppuvanam Madapuram ,Sivaganga district ,Manamadurai Saraka ,Shanmugasundaram… ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு