மாஸ்கோ: 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு விரிவான முயற்சியைத் தொடங்கியுள்ளார். ஆனால் ரஷ்யா மற்றும் உக்ரைனின் முரண்பட்ட கோரிக்கைகளால் அமைதி முயற்சி முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில் ரஷ்யாவின் உயர் இராணுவ அதிகாரிகளுடனான வருடாந்திர கூட்டத்தில் பேசிய புடின், ‘பேச்சு தோல்வி அடைந்தால், ரஷ்யா தனது வரலாற்றுப் பிரதேசங்களை ராணுவ வழிகளில் விடுவிக்கும். தொடர்ந்து தாக்குதலை விரிவுபடுத்த ரஷ்யா நடவடிக்கை எடுக்கும் ’ என்றார்.
