இந்தியாவில் சராசரி ஊழியர் சம்பளம் அடுத்த ஆண்டு 9% அதிகரிக்கும்: அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் சராசரி ஊழியர் சம்பளம் 2026 ஆம் ஆண்டில் 9 சதவீதம் அதிகரிக்கும் என்றும், குறுகிய கால ஊக்கத்தொகைகள் மற்றும் திறன் அடிப்படையிலான அமைப்புகளில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்படும் என்றும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெர்சர் நிறுவனம் மொத்த ஊதியம் குறித்த கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பரந்த,முழுமையான மதிப்பு முன்மொழிவுகளை நோக்கி நகர்கின்றன.

சம்பள உயர்வை பாதிக்கும் முக்கிய காரணிகளில் தனிப்பட்ட செயல்திறன், பணவீக்கம் மற்றும் வேலை சந்தையில் நிறுவனத்தின் போட்டித்தன்மை ஆகியவை அடங்கும். 8000க்கும் மேற்பட்ட பணிகளில் 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஊதியங்களை பற்றிய விவரங்களை சேகரித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் நிறுவனங்கள் குறுகிய கால ஊக்கத்தொகைகளில் கவனம் செலுத்தி, மிகவும் வெளிப்படையான, திறன் கையகப்படுத்தல் மற்றும் பணியமர்த்தல் அடிப்படையிலான அமைப்புகளை நோக்கி நகர்ந்து வருவதை காட்டுகிறது.

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் அடுத்த ஆண்டு உயரும்.அதிகபட்சமாக உயர் தொழில்நுட்பம், வாகன துறையில் முறையே 9.3 மற்றும் 9.5 சதவீத ஊதிய உயர்வு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: