மும்பை : மேம்பட்ட மரபணுப் பரிசோதனைகளை (Genitic Tests) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த பரிசோதனைகளை செய்ய குறைந்தது ரூ.10,000 செலவாகும் நிலையில், அதை விட பத்து மடங்கு குறைவாக வெறும் ரூ.1,000க்கு வழங்கும் முயற்சியில் ரிலையன்ஸ் ஈடுபட்டுள்ளது. மரபணு நோய்களைக் கண்டறிதல், நோய்களின் அபாயத்தை மதிப்பிடுதல், சரியான சிகிச்சையைத் தீர்மானித்தல், பரம்பரை நோய்களை தடுத்தல் உள்ளிட்டவைகளுக்கு மரபணுப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
