100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!

 

டெல்லி: 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக வளர்ந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பான மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு நாள்களாக இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று மசோதா நிறைவேற்றப்படவுள்ளது. இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணி நடத்தினர். விக்சித் பாரத் ஜீ ராம் ஜீ மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். இந்த பேரணியில் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்.

Related Stories: