புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 9ம் தேதி தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க துப்பாக்கியுடன் வந்த தவெக நிர்வாகி பிரபுவின் பாதுகாப்பு அதிகாரி (முன்னாள் சிஆர்பிஎப் வீரர்) டேவிட்டை போலீசார் பிடித்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்த கூட்டத்தின்போது பாஸ் இல்லாதவர்களை உள்ளே விடுமாறு கூறிய புஸ்ஸி ஆனந்தை கடுமையாக எச்சரித்த எஸ்பி இஷா சிங்கை பாஜ அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இந்நிலையில், தவெக நிர்வாகியிடம் துப்பாக்கியை பறிமுதல் செய்த எஸ்ஐ சுப்பிரமணியன், ஐஆர்பிஎன் காவலர் மணிகண்டன் ஆகியோரை முதல்வர் ரங்கசாமி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
