செல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

இடைப்பாடி, டிச. 11: இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரையோரத்தில் உள்ள செல்வவிநாயகர், வீரமாத்தி அம்மன், கருப்பணசுவாமி, சப்த கன்னிமார் கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் திரளான பெண்கள், காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து, பம்பை மேளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். நேற்று காலை 2ம் கால யாக வேள்வியை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: