அரசு கலைக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

பாப்பாரப்பட்டி, டிச.17: பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாமரத்துப்பள்ளம் பகுதியில் செயல்படும் பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற முகாமிற்கு, கல்லூரியின் முதல்வர் சங்கர் தலைமை வகித்தார். விமல் வெளிமுகமை உதவி மேலாளர் பசுபதி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் குறித்து மாணவர்களிடையே பேசினார். மாணவர்களுக்கு வேலை வழிகாட்டி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. முகாமில் 147 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் வாழ்வியல் வழிகாட்டி, வேலைவாய்ப்பு துறையின் ஒருங்கிணப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பேசினர். முகாமில் கலந்து கொண்ட மாணவர்களில், 132 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணைகளை கல்லூரி முதல்வர் வழங்கினார்.

Related Stories: