புதுக்கோட்டை, டிச. 17: புதுக்கோட்டை தெற்கு மாநகரம் பாகம் எண் 96 பகுதியில் நடந்த என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
இதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் ஈடுபடுத்தும் விதமாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முன்னெடுப்பை மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக சார்பில் சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி புதுக்கோட்டை தெற்கு மாநகரம் பாகம் எண் 96 பகுதியில் நடைபெற்றது.
இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன், தெற்கு மாநகர பொறுப்பாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் பாக முகவர், பாகநிலை உறுப்பினர்கள், பாக நிலை டிஜிட்டல் முகவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு இல்லம் தோறும் சென்று ‘திராவிட மாடல்’அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பரப்புரை பணியில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
