நாகை தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் மொபைல் சேவை 3 நாட்கள் நடக்கிறது

நாகப்பட்டினம், டிச. 17: நாகப்பட்டினம் தலைமை தபால் நிலைய வளாகத்தில் 3 நாட்கள் பாஸ்போர்ட் மொபைல் சேவை வழங்கப்படும் என நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் தலைமை தபால் நிலைய வளாகத்தில் வரும் 22ந்தேதி முதல் 24ந்தேதி வரையில், 3 நாட்கள் பாஸ்போர்ட் மொபைல் வாகனம் நிறுத்தப்பட்டு பாஸ்போர்ட் சேவை வழங்கப்படும். நாகப்பட்டினம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இந்த மொபைல் பாஸ்போர்ட் சேவை மூலம் பல்வேறு பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளைப் பெறலாம்.

https://www.possportindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் நேரம் பதிவு செய்ய வேண்டும்.வழக்கமான திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கட்டணம் செலுத்திய பின்னர் மொபைல் வேன் என்பதை இடமாகத் தேர்வு செய்து வருகை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். விண்ணப்ப ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன்பு விண்ணப்பதாரர்கள் வருகை தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: