மதுரை, டிச. 16: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் கணேசன், வழக்கறிஞர் அணி செயலாளர் கிருபா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், வாடிபட்டி தாலுகாவில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் வசிக்கும் ஏழை, எளிய ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
