டூவீலர் மீது வேன் மோதி எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம், இலங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(49). எல்லைப் பாதுகாப்பு படை வீரர். இவரது மனைவி சரண்யா, 7 வயது மகளுடன் விளாத்திகுளத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 12ம் தேதி மனைவி, மகளை பார்க்க விளாத்திகுளத்திற்கு டூவீலரில் சென்றபோது, வேன் மோதி பாலமுருகன் உயிரிழந்தார். மேலூரில் அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Related Stories: