சென்னை: தமிழகப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியது. தொடக்கப் பள்ளிகளில் வகுப்பு 1 முதல் 5 வகுப்புகள் வரை படிக்கும் குழந்தைகளுக்கான இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடுகள் டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கின்றன. இதையடுத்து, 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வகுப்பு 1, 3, 5க்கு காலை 10 மணிக்கும், நடக்கும். வகுப்பு 2, 4க்கு மதியம் 2 மணிக்கும் மதிப்பீட்டு தேர்வு நடக்கும்.
மேலும், டிசம்பர் 15ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு தமிழ்ப்பாடத் தேர்வும், 17ம் தேதி பிற மொழிப்பாடத் தேர்வுகளும் நடக்கும். 18ம் தேதி 1,2,3 வகுப்புகளுக்கு ஆங்கிலப்பாடத் தேர்வும், 4, 5வகுப்புகளுக்கு கணக்குப் பாடத் தேர்வும் நடக்கும். 22ம் தேதி 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு அறிவியல் பாடத் தேர்வுகளும், 23ம் தேதி 1,2 மற்றும் 3ம் வகுப்புகளுக்கு கணக்குப் பாடத்தேர்வும், 4, 5ம் வகுப்புகளுக்கு சமூக அறிவியல்பாடத் தேர்வும் நடக்கும். அதன் ெதாடர்ச்சியாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரையும் நடக்கிறது.
வகுப்பு 6 மற்றும் 8க்கு காலை 10மணிக்கும், 7ம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கும் தேர்வு நடக்கும். அதன்படி 6,7,8 வகுப்புகளுக்கு 16ம் தேதி ஆங்கிலம், 17ம் தேதி பிற மொழிப்பாடங்கள், 18ம் தேதி கணக்கு, 19ம் தேதி உடற்கல்வி, 22ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. மேலும், 9ம் வகுப்புக்கான தேர்வு மதியம் 2 மணிக்கு நடக்கும். 15ம் தேதி தமிழ்ப்பாடம், 16ம் தேதி ஆங்கிலம், 17ம் தேதி விருப்பமொழிப்பாடம், 18ம் தேதி கணக்கு, 19ம் தேதி உடற்கல்வி, 22ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடக்கும். இதையடுத்து 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
