×

திரு.வி.க.நகர் மண்டலத்தில் ரூ.49.70 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டிடம் கட்டும் பணி: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்

சென்னை: திரு.வி.க.நகர் மண்டலம் நரிசங்க பெருமாள் கோவில் தெருவில் ரூ.49.70 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78, நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் 78வது வார்டு மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் 750 சதுர அடி பரப்பளவில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டும் பணியினை அமைச்சர் சேகர்பாபு நேற்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மேயர் பிரியா, மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமன குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுமதி, புனிதவதி எத்திராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiru.V.K.Nagar Mandal ,Minister ,Sekarbabu ,Chennai ,Narasingha Perumal Kovil Street, Thiru.V.K.Nagar Mandal ,
× RELATED இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி –...