முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு

கூடலூர்: முல்லை பெரியாறு அணை துணை கண்காணிப்புக்குழு தலைவரும், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தென்மண்டல இயக்குனருமான கிரிதர் தலைமையில் குழுவினர் 3வது முறையாக பெரியாறு அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த பணியில் தமிழ்நாடு மற்றும் கேரளா அரசின் பிரதிநிதிகளும் இருந்தனர். முன்னதாக தேக்கடி படகுத்துறையிலிருந்து தமிழக பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான படகின் மூலம் பெரியாறு அணை பகுதிக்கு சென்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ஆய்வில் மெயின் அணை, பேபி டேம், மண் அணை, கேரள பகுதிக்கு உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதி மற்றும் மதகுகளை இயக்கி பார்த்தும், கேலரி பகுதிகளை ஆய்வு செய்ததோடு, நீர்வரத்து, நிலநடுக்க கருவி, நில அதிர்வு கருவி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

Related Stories: