பி.என்.ஒய்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புக்கு இறுதிக்கட்ட காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை: ஓமியோபதித் துறை அறிவிப்பு

சென்னை: ஓமியோபதித் துறை ஆணையர் வெளியிட்ட அறிக்கை: 2025-2026-ம் கல்வியாண்டில் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பு சேர்க்கைக்கான புதிய விண்ணப்பப் படிவங்கள் இணையவழியில் தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. பி.என்.ஒய்.எஸ். பட்டபடிப்புக்கான தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணைய வழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஏற்கனவே பி.என்.ஒய்.எஸ். பட்டபடிப்புக்கு விண்ணப்பித்து முதல் மூன்று கட்ட கலந்தாய்விலும் இடம் கிடைக்காதவர்கள், முதல் இரண்டு கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தும் சேராதவர்கள், மூன்றாம் கட்ட கலந்தாய்வு துவங்கும்முன் இடைநிறுத்தம் செய்தவர்கள், இரண்டு இறுதி கட்ட கலந்தாய்விற்கும் விண்ணப்பிக்காதவர்கள், விண்ணப்பித்தும் இடம் கிடைக்காதவர்கள் இக்கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

3ம் இறுதி கட்ட காலியிடங்களுக்கான கலந்தாய்விற்கு விருப்பத் தேர்வுகளை நிரப்ப தகுதியில்லாதவர்கள்: அரசு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான, முதல் மூன்று கலந்தாய்வுகளில் இடம் கிடைத்து கல்லூரியில் சேர்ந்து இந்தக் கலந்தாய்வு வரை படிப்பைத் தொடர்பவர்கள். மூன்றாம் கட்ட கலந்தாய்வு துவங்கியபின்பு இடைநிறுத்தம் செய்தவர்கள், மூன்றாம் கட்ட கலந்தாய்வில் இட ஒதுக்கீடு கிடைத்தவர்கள், இரண்டு இறுதி கட்ட கலந்தாய்வில் இட ஒதுக்கீடு கிடைத்தவர்கள் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org என்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

விண்ணப்பிக்கும் முன் உரிய தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் பிடிஎப், ஜெபிஇஜி வடிவில் பதிவேற்றவும். விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும், நாளை மதியம் 12.30 மணி வரை இணையவழி விண்ணப்பம் பதிவு செய்யலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: