சென்னை : 2025ம் ஆண்டில் முதல்முறையாக சென்னை விமான நிலையம் பகுதியில் நேற்று (டிச.14) அதிகாலையில் 20° க்கும் குறைவான (19.8°) குளிர்ந்த வானிலை பதிவாகியுள்ளது. டிட்வா புயலின் தாக்கம் குறைந்ததில் இருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலைப் பொழுதுகளில் குளுமையான சூழல் நிலவி வருகிறது.
