சேலம்: மேட்டூர் அருகே காவேரிபுரத்தில் முன்விரோதம் காரணமாக செல்வகுமார் என்பவர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 3 அண்டுகளுக்கு முன்பு குமார் என்பவரை கொலை செய்ததாக செல்வகுமார் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. குமார் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் செல்வகுமார் (50) கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.
