25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி, மணப்பாறை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துவரங்குறிச்சி பிரிவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது குறுக்கே இருசக்கர வாகனம் வந்தது; இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பிய போது எதிர்பாராத விதமாக 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது; விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் காயம் – லாரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.

Related Stories: