நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

ஓசூர், டிச.15: ஓசூர் மாநகராட்சி மூக்கண்டப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, மாநகர திமுக செயலாளரும், மேயருமான சத்யா ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு தாய்-சேய் நலப்பெட்டகம், காசநோயாளிகளுக்கு புரத சத்து நிறைந்த பொருட்கள் வழங்கினர். மேலும், சிகிச்சை அளிக்கும் முறைகளை பார்வையிட்டனர். இதில் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராமய்யா, மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலட்சுமி நவீன், வார்டு செயலாளர் மோகன்பாபு, மத்தம் சந்திரன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: