5 நாள்களாக நீடிக்கும் மோதல்; தாய்லாந்து மீது கம்போடியா ராக்கெட் தாக்குதல்: தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி

கந்தரலக்: தாய்லாந்து மீது கம்போடியா நடத்திய ராக்கெட் தாக்குதலில் தாயலாந்து வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே உள்ள எல்லையில் இந்து கோயில் ஒன்று உள்ளது. இதற்கு இரண்டு நாடுகளும் உரிமை கோருவதால் இரு நாடுகளிடையே நூறாண்டுகளை கடந்து எல்லை மோதல் நீடித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக சண்டை நிறுத்தம் அமலில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மோதல் முற்றி உள்ளது.

கடந்த 7ம் தேதி கம்போடியா நடத்திய தாக்குதலில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியது. இதனால் கடந்த ஐந்து நாள்களாக சண்டை நீடித்து வருகிறது. நேற்று காலை கம்போடியா நடத்திய ராக்கெட் தாக்குதலில் கிராமவாசி ஒருவரும், தாய்லாந்து வீரர்கள் நான்கு பேரும் பலியாகினர். இருநாடுகளிடையே நீடிக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: