கோலாலம்பூர்: தமிழ் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், நடிப்பை தாண்டி கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த 24 மணி நேர கார் ரேஸில் 3வது இடத்தை பிடித்தார். அடுத்த ஆண்டு அபுதாபியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கிறது. இந்நிலையில், தற்போது மலேசியாவில் நடக்கும் கார் ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்றது.
அப்போது அஜித் குமார் கார் ஓடுதளத்தில் பழுதாகி நின்றது. உடனே அதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து அஜித் குமார் கூறுகையில், ‘இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. பந்தயம் என்றால் இப்படித்தான் இருக்கும். அது சோர்வடைய செய்கிறது என்றாலும், எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும்’ என்றார்.
