திருவனந்தபுரம்: பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் மலைப்பாதையில் சில பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே இதய நோய் உள்ளவர்கள் மலை ஏறுவதற்கு முன் உரிய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கடந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் மட்டும் 46 பக்தர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த வருடம் இதுவரை 15க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னையைச் சேர்ந்த செல்வமணி (40) என்ற பக்தர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
