ஸ்ரீவிஜயபுரம்: அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் உள்ள பியோத்னாபாத்தில் உள்ள பூங்காவில் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா , ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் ஆகியோர் சாவர்க்கரின் சிலையை திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து பூங்காவிற்குள் ருட்ராட்ச மரக்கன்றுகளை அவர்கள் நட்டுவைத்தனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் அமித் ஷா , மோகன் பக்வத் ஆகியோர் ஸ்ரீவிஜயபுரத்தில் உள்ள பிஆர் அம்பேத்கர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்தமானில் சாவர்க்கர் சிலை திறப்பு
- சாவர்க்கர்
- அந்தமான்
- ஸ்ரீவிஜயபுரம்
- விநாயக் தாமோதர் சவர்கர்
- பியோத்னாபாத்
- நிக்கோபார் தீவுகள்
- மத்திய உள்துறை அமைச்சர்
- அமித் ஷா
- ஆர்எஸ்எஸ்
- மோகன் பகவத்...
