பெங்களூரு: கர்நாடக அரசு வெளியிட்ட உத்தரவில், ‘மேகதாது திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்காக, தலைமை பொறியாளர் அலுவலகம் மற்றும் கண்காணிப்பாளர் பொறியாளர் அலுவலகத்தை திறக்க, கடந்த மாதம் 18ம் தேதி, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், புதிய அலுவலகம் அமைப்பதற்கும், பணியிடங்களை நியமிப்பதற்கும் நிதித் துறையின் ஒப்புதல் தேவை, இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இந்தவேளையில், திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அரசு, கர்நாடக பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குநரிடம் ஒப்படைத்துள்ளது ’ என குறிப்பிட்டுள்ளது.
மேகதாது அணை திட்டம்: கர்நாடக அரசு குழு அமைப்பு
- கர்நாடகா அரசு
- பெங்களூரு
- தலைமை பொறியாளர் அலுவலகம்
- மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்
- துணை முதலமைச்சர்
- டி.கே. சிவகுமார்...
