போபால்: மபி மாநில வேளாண்துறையின் துணை செயலாளர் சந்தோஷ் வர்மா ஐஏஎஸ். தலித், பழங்குடிகள் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் தலைவரான இவர் பிராமணர்களை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து, பிராமணர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சந்தோஷ் வர்மா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் 14ம் தேதி மபி முதல்வர் மோகன் யாதவ் வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பிராமணர் சங்க தலைவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சந்தோஷ் வர்மாவை பதவியில் இருந்து நீக்கி மாநில அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரை பணியில் இருந்து நீக்குவதற்கு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.
பிராமணர்கள் குறித்த கருத்தால் சர்ச்சை: ம.பி ஐஏஎஸ் டிஸ்மிஸ்
- பிராமணர்கள்
- ஐஏஎஸ்
- போபால்
- மாநில வேளாண்மைத் துறை
- துணை செயலாளர்
- சந்தோஷ் வர்மா
- தலித், பழங்குடியினர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சங்கம்
- பிராமண
- சந்தோஷ் வர்மா…
