பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா

சென்னை: பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்படும் விமானங்களின் பயணிகளுக்கு முழு கட்டணமும் திரும்ப தரப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் 24 மணிநேரம் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பனிமூட்டத்தால் விமானங்கள் ரத்து, தாமதம் குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும். முழு கட்டணம் அல்லது வேறு விமானத்தில் பயணிக்க டிக்கெட்கள் மாற்றிக் கொடுக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories: